muthalsaithy

Friday, June 23, 2006

இட்லி வடை அவர்கள் துக்ளக் வார இதலில் வந்த புலி எதிர்ப்பு கட்டுரை ஒன்றை விரசுரித்திரிந்தார்.
அதற்கு ஈழத்திலிருந்து கிடைத்த ஒரு பின்னுஸட்டம் என்னை கவர்வதாய் இருந்தது.
நீங்களும் பாருங்கள் சிலவெளை உங்களுக்கு சில உண்மைகள் புரியும்.


துக்ளக்கில் வந்த இந்த கட்டுரையினை ஒரு அளவுக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. விடுதலைப் புலிகளின் மேல் குற்றம் உண்டு என்பதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்ளவேண்டும்தான. ஆனால் துக்ளக், சோ போன்றவர்கள் ஏன் இலங்கை அரசாங்கத்தை இப்படி, அதுவும் அவர்களது மனித உரிமைமீPறல்களை நியாயப்படுத்தி எழுதுகிறார்கள் என்பதுதான் புரியவிலை;லை. சோ கொஞ்சம் எம் நாட்டிற்கு வந்து தமிழர்கள் படும் அவலங்களைப் பார்க்கட்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறோம் ஐயா நாங்கள். துக்ளக் மட்டுமல்ல... அனைத்து இந்தியத் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்ன தெரியுமா.. நாங்கள் இலங்கையில் தமிழர்கள் என்ற காரணத்தினால் இரண்டாம் தரப் பிரஜையாகவே நடத்தப்படுகிறோம். இங்கு வந்து பாருங்கள் கெப்பிட்டிகொல்லாவ சிங்கள மக்கள் செத்தால் மட்டும்தான் அரசாங்கத்தினால் புலிப்பயங்கரவாதம் பெரிதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. நூட்டின் முதற் பிரஜை சனாதிபதி நேரடியாக ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்படட மக்களுக்கு ஆறுதல் கூறுகின்றார், இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்படுகின்றன.. ஏன்… அவர்கள் சிங்களவர்கள்…. அல்லைப் பிட்டி தொடக்கம்.. மன்னார் வங்காலை வரை தமிழர் மீதான அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. ஏத்தனையோ அப்பாவிப் பொதுமங்கள் வகைதொகையின்றி தொடர்ந்தும் செத்து மடிந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கெல்லாம் அரசோ.. சனாதிபதியோ.. இழப்பீடு கொஞ்சம் கூட இல்லை. பேருக்கு ஒரு விசாரணை கமிஷன்.. அரசே இப்படிச் செய்யும்போது.. நீங்கள் பயங்கரவாத என்று சொல்லும் புலிப்பயங்கரவாதிகள் பழிவாங்கத்தானே பார்ப்பார்கள் தம் மக்களின் இழப்பு அவர்களுக்கு மட்டும் இனிக்குமா?? முதலில் அரசு பாதுகாப்பளிக்கட்டும் தமிழர்களுக்கு. அதன் பிறகு பாருங்களேன்.. அதைவிட்டு.. புலிகளை குற்றம் சுமத்துகிறேன் என்று சொல்லி.. அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் இந்த சோ போன்றவர்கள்.. உங்கள் நாட்டில் மட்டுமல்ல.. எங்கள் நாட்டிலும் உள்ளனர்... இவர்கள் இருக்கும்வரை ஈழம் ஒரு நாளும் அமைதியாக இருக்காது... இவர்களுக்கும் அதுதான் வேண்டும்... ஐயா.. நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் ஐயா.. அரசால் மட்டுமல்ல.. துணைக்குழுக்களாலு;தான்... இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியப்போகின்றது... உங்களுக்கு உங்களனின் ஊடகங்கள் சொல்லும் செய்தி மட்டும்தான் தெரியும்... கொஞ்சம் நடுநிலமையோடு பாருங்கள்... எங்கள் அவல நிலையினை.. துன்ப நிலையினை... நீங்கள் புலிகள் மீது குற்றம் சுமத்துங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் மக்களுக்கு நடக்கும் பாதகங்களை மூடி மறைக்காதீர்கள் ஐயா.. ஒரு அரசே பயங்கரவாதமாக இங்கு உள்ள நிலையில்.. ஒரு பயங்கரவாத அமைப்பினை மட்டும் ஒரு பக்க சார்பாக விமர்சிப்பதுதான் மனதுக்கு உறுத்தலாக உள்ளது. அரசின் குண்டு வீச்சில் புலிகளின் முகாம் தாக்கப்பட்டதாக பக்கத்திலிருந்து பார்த்ததுபோல் சோ கதை விடுகிறார். வாருங்கள் ஐயா இன்னும் குண்டு வீச்சு எச்சங்கள் உள்ளது வந்து பாருங்கள்.. அப்போதாவது பாதிக்கப்பட்டது பொதுமக்கள்தான் புலிகள் இல்லை என்ற உண்மை உங்களுக்குப் புரியும். புரிந்தாலும் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களை மாத்த முடியுமா? புpரபாகரன் ஒரு பார்ப்பனனாக இருந்தால் அல்லது சாவது பார்ப்பனனாக இருந்தால் ஒருவேளை உங்கள் மனம் உங்கள் போன்றவர்களினதும் சோவினதும் மனம் இளகுமோ தெரியாது.

சத்தியமாக இவர்களைப் போன்றவர்களை நினைத்தால் மனது பாரமாக இருக்கின்றது...
கண்ணீருடன் ----- ஈழத்திலிருந்து.
நன்றி ஐயா.. உதவி செய்யவேண்டாம்.. உபத்திரம் ஆவது செய்யாதீர்கள்... உங்களுக்கு ஒரு கும்பிடு.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது